Rock Fort Times
Online News

திருச்சியில் திமுக இளைஞர் அணி நிா்வாகிகளுக்கான நேர்காணல்….

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கழக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கழக முதன்மை செயலாளரும்.நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய வடக்கு,தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கழக இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சி மண்டல பொறுப்பாளர் ஆனந்தகுமார் தலைமையில் இன்று ( 25.10.2023 ) நடைபெற்றது. இந்த நேர்காணலில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மாநில துணைச் செயலாளர்கள் ஜோயல், பிரகாஷ், இன்ப ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரபு, சீனி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்