ஸ்ரீரங்கம் அம்மாபேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 43). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று ( 28.08.2023 ) இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடி நோக்கி அரசு டவுன் பஸ்சை ஓட்டி சென்றார். பஸ் தேவர் ஹால் அருகே வந்தபோது 4 பேர் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளனர். படிக்கட்டில் நிற்க வேண்டாம் என்று டிரைவரும், கண்டக்டரும் அவர்களிடம் கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் நான்கு பேரும் கீழே இறங்கி கல்லை எடுத்து டிரைவரை தாக்கி உள்ளனர். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பஸ் டிரைவர் திருமுருகன் கோட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.