மாணவிக்கு பாலியல் தொல்லை: திருச்சியில் கல்லூரி பேராசிரியர் “சஸ்பெண்ட்”…
நிர்வாகம் அதிரடி நடவடிக்கை....
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பிரபல கல்லூரியில் வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் லியோ ஸ்டான்லி. இவர், அதே கல்லூரியில் படிக்கும் மாணவிக்கும், மாணவியின் தாயாருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாணவி தரப்பில் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றப்பட்டார். பின்னர், இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து கல்லூரி நிர்வாக விசாகா கமிட்டியினர் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரியவந்த நிலையில், உதவி பேராசிரியர் லியோ ஸ்டான்லி பணியிடை நீக்கம்(சஸ்பெண்ட்) செய்யப்பட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.