Rock Fort Times
Online News

உரிமமின்றி வேட்டைத் துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது…

திருச்சி சமயபுரம் பகுதியில் சிலர் வேட்டைத் துப்பாக்கிகளுடன் முயல், மற்றும் பறவைகளை வேட்டையாடி வருவதாக சமயபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்க்கு விரைந்த போலீசாா் உாிமம் இல்லாத வேட்டைத் துப்பாக்கியுடன் கொக்கு மற்றும் முயலை   வேட்டையாடிய  இருவாிடம்  விசாரணை மேற்கொண்டனா்.  விசாரணையில்  ஒருவர் சமயபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (40), மற்றவர் துறையூரைச் சேர்ந்த ராகுல் (24) என்பதும் இருவரும், சமயபுரம் டோல்கேட், நரிக்குறவர் தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் ரூ. 7,500 க்கு கள்ளத்துப்பாக்கியை வாங்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் சமயபுரம் போலீஸார் கைது செய்தனா். அவர்களிடமிருந்த கள்ளத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்