கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த லாவண்யா கோல்டு ஜுவல்லர்ஸ் நிறுவனம் எஸ்பிஐ வங்கியில் 65 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக கடந்த 2016ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையில் வங்கியில் தவறான நகை இருப்பை கணக்கு காட்டி கடன் வாங்கியதும், வாங்கிய கடனை தொழில் மேம்பாட்டுக்கு பயன்படுத்தாமல், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 60 முதல்100 சதவீதம் வரை ஆண்டு வட்டிக்கு முதலீடு செய்தது தெரியவந்தது. மேலும், நகை கடைகளில் உள்ள தங்க கட்டிகள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை தனிப்பட்ட விவகாரங்களுக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாது அதை பிட்காயின்களில் முதலீடு செய்ததும் தெரியவந்தது.
அதோடு மட்டுமின்றி வெளிநாடுகளில் பிட்காயினில் முதலீடு செய்து சொத்துக்களை வாங்கி குவித்ததும், கிரிப்டோ மூலமாக கிடைக்கப்பெற்ற லாபம் மூலம் 1.70 கோடி ரூபாயில் சென்னையில் சொகுசு வீடு வாங்கியதும் தெரியவந்தது. மேலும், வங்கியில் வாங்கிய கடனுக்காக சில சொத்துக்களை அடமானமாக வைத்ததும், அந்த கடனை செலுத்தாததால் அந்த சொத்துக்களை வங்கி ஆன்லைன் மூலமாக ஏலம் விட்டுள்ளது. அதனைத் தெரிந்து கொண்ட லாவண்யா கோல்ட் ஜுவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள், தங்கள் ஊழியர்களை பினாமியாக பயன்படுத்தி அடமானம் வைத்த சொத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, சந்தை மதிப்பில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வெறும் ஆறரை கோடிக்கு வாங்கி வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தி மோசடி செய்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சட்ட விரோத பணப் பரிமாற்றம் மூலம் சேர்த்து வைக்கப்பட்டுள்ள சுமார் 34.11 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள நான்கு நிலங்கள் மற்றும் ஒரு வீட்டுமனை ஆகிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது
1
of 840
Comments are closed, but trackbacks and pingbacks are open.