இன்று பலரும் மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல மாதம் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லபவர்கள் அந்த செடிகளை எப்படி பராமரிக்கலாம் என்பது குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம். ஆறு மாத காலம் நாம் வீட்டில் இல்லை என்றால் வீட்டு தோட்டத்தை பராமரிக்க நிச்சயம் ஆட்களை நியமித்திருக்க வேண்டும்.
வருவார காலம் முதல் ஒரு மாத காலம் வரை வீட்டில் இருக்க முடியாத சூழல் என்றால் ஆட்டோமேட்டிக் வாட்டரிங் சிஸ்டம் அமைக்கலாம். இதன்மூலம் செடிகளுக்கு தண்ணீர் மட்டுமே செல்லும். பூச்சிகள் வருவதை தடுக்க முடியாது. வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றிக்கொண்டிருந்தால் செடி வளருமே தவிர எந்த சத்தும் இருக்காது மற்றும் காய்க்காது. இவ்வளவு வசதிகள் இருந்தாலும்கூட, வீட்டு தோட்டத்தை யாராவது ஒருவர் நேரடியாக பராமரிப்பது மிகமிக அவசியம்.
இல்லையென்றால் 6 மாதம் கழித்து வீட்டுத் தோட்டத்தை சென்று பார்த்தல் தோட்டம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடலாம். ஆறு மாதம் என்பது ஒரு பட்டத்திற்கு சமம். காய்கறி தோட்டத்தில் பூச்சிகள் தாக்குதல் நடக்கக்கூடும். எனவே வீட்டில் நாம் இல்லை என்றாலும் மாற்று ஏற்பாடாக கட்டாயம் வேறு
யாராவது நியமித்து தோட்டத்தை பராமரிக்க வேண்டும்.