பொதுவாக தினமும் மூன்றுவேளை சாப்பிடுவதற்கு நாம் பழகி இருக்கிறோம். அந்த மூன்றுவேளைகளிலும்கூட, நாம் உண்ணும் உணவின் அளவில் எந்தவித வித்தியாசமும் இருப்பதில்லை. ஆனால் இந்த உணவுமுறை ஆரோக்கியமானதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக காலை உணவை அரசன்போல சாப்பிட வேண்டும். மதிய உணவை சாமானியனை போல சாப்பிட வேண்டும். இரவுநேரத்தில் பிச்சைக்காரனைபோல சாப்பிட வேண்டும் என்பார்கள். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? காலை வேளையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனெனில் இரவு 8 அல்லது 9 மணிக்கு நாம் சாப்பிடும் உணவுக்குபின், அடுத்தநாள் காலை 8 அல்லது 9 மணிக்குதான் மீண்டும் சாப்பிடுவோம். இடைப்பட்ட காலகட்டத்தில் நாம் எப்போதுமே சாப்பிடுவதில்லை என்பதால் நம் உடலுக்கு தேவையான சக்தி பெருமளவு குறைந்திருக்கும்.
அதோடு காலையில் சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க வேண்டியிருக்கிறது. அந்த வேலைகளை செய்ய வேண்டும் என்றால் அதற்கு அதிகப்படியான சக்தி தேவையாக இருக்கிறது. அந்த தேவையை நிறைவேற்றும் வகையில், நம் காலைஉணவு அமைய சாப்பிடுவதில்லை என்பதால் நம் உடலுக்கு
வேண்டும். காலை உணவைவிட, மதிய உணவை குறைவாக உண்ண வேண்டும். இரவில் எந்த வேலையும் செய்யப்போவதில்லை. ஓய்வுதான் எடுக்கப்போகிறோம் என்பதால் மிகக்குறைந்த உணவே போதுமானது.
இதுமட்டுமில்லாமல் வயிறு நிறைய சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு அறிவியல் காரணமும் இருக்கிறது. நம் இரைப்பையில் தோராயமாக 2 மணிநேரம்தான் உணவு தங்கி இருக்கும். உணவுப்பொருள்கள் குடல்நோக்கி தள்ளப்பட்டவுடன், இரைப்பை காலியாகிவிடும். அதனால்தான் மூன்று மணி நேரம் இடைவெளியில் சாப்பிட சொல்கிறார்கள் மருத்துவர்கள். சிறிதளவு சாப்பிடுவதால் இரைப்பைக்கு அதிக சுமை இருக்காது. கொஞ்சம் கொஞ்சமாக மூன்று மணி நேரம் இடைவெளியில் சாப்பிடுவதால் பல பலன்கள் கிடைக்கின்றன. உடலில் அதிக கலோரி சேராது. அதிக உணவு இருக்காது. இரைப்பை விரியாது. தொப்பை வளராது. எனவே வயிறு நிறைய சாப்பிடாமல் சிறுகசிறுக சாப்பிட்டு நலமாக வாழலாம்.