ஒவ்வொரு முறை உணவு தயாரித்து முடித்தபின்பும் உணவை தாளித்து விடுகிறோம். இந்த தாளிசம் செய்யும் முறைக்கு பின்னால் ஒரு தத்துவபின்னணி உள்ளது. உணவு தாளிக்கும்போதும், அவை ஒன்றோடு ஒன்று கலக்கும்போதும் அதன் மூலப்பொருட்களும் கலக்கும். அப்போது ஏற்படும் மாறுதல்களில் நம் உடலை பாதிக்கும் எந்தவொரு சிறுநிகழ்வும் ஏற்படாதிருக்க மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் எனும் 8 வகை கார மற்றும் நறுமண பொருட்களை கடைசியில் சேர்க்கும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்திருந்தனர்.
இப்போது தாளிக்கும் முறைக்கும், அப்போதைய தாளிசத்திற்கும் நிறையவே மாறுதல் உண்டு. இந்த பொருட்கள் உணவு சமைக்கப்பட்ட பின்பு சேர்க்கப்படும்போது, சுவையினை பெருக்குவதுடன் ஜீரணத்தையும் சீராக்கி, உணவில் எவ்வித கேடும் விளையாமல் உடல் நலத்தை பேணும். இன்றும்கூட கிராமப்புறங்களில் பழைய முறைப்படி தாளித்து ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். நகரத்தில் வாழ்பவர்கள் மறந்து விட்டார்கள் அதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு போகிறார்கள் பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டால் நலமாக வாழலாம்.