ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு கட்டும் பிரிமியத்துக்கு நிதியாண்டில் நிபந்தனைக்குட்பட்டு 15 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின்கீழ் வருமான வரிச்சலுகை இருக்கிறது. மேலும் பிரீமியத்துக்கு வரிச்சலுகை கிடைப்பது போல், பாலிசி முதிர்வு தொகை மற்றும் இறப்பு இழப்பீட்டுத்தொகைக்கும் வருமான வரி கிடையாது. நம்மில் பலர் வருமான வரியை மிச்சப்படுத்த மட்டுமே லைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வருகிறார்கள். இதனால்தான் அதிக பிரிமியம், குறைவான கவரேஜ் கொண்ட எண்ட்வ்மென்ட் மணி பேக் போன்ற பாலிசிகளை பலரும் எடுத்து வருகிறார்கள்.
இந்த பாலிசியில் ஒருவருக்கு ஆயுள் காப்பீடு அளிப்பதோடு, சேமிப்பாக செயல்பட்டாலும் இரண்டையும் முழுமையாக அளிப்பதில்லை. ஒருவருக்கு மிதமிஞ்சிய சொத்து இருக்கிறது, அவருக்கு ஆயுள் காப்பீடு தேவையில்லை. இருக்கும் பணத்தை முதலீடு செய்தால் அதற்கு வரியில்லா வருமானம் வேண்டும் என்று நினைத்தால் மட்டுமே இந்த வகையில் பாலிசிகள் எடுக்கலாம். இந்த பாலிசியின் மூலம் கிடைக்கும் வருமானம் பணவீக்க விகித அளவுக்கு சுமார் 5% தான் இருக்கிறது.
குறைவான பிரிமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டெர்ம் பிளானை எடுத்துவிட்டு, மீதி தொகையை நீண்ட காலத்தில், அதிக வருமானம் தரும் பப்ளிக் பிராவிடண்ட் பண்ட், பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்து வருவது லாபகரமாக இருக்கும். காப்பீட்டு பாலிசிக்கு பிரிமியத்துக்கு கிடைக்கும் வருமான வரி விலக்கு என்பது கூடுதல் சலுகைதானே தவிர, அதற்காக அதிக தொகைக்கு ஆயுள் காப்பீடு பாலிசிகளை எடுத்து, அதிக பிரிமியம் கட்டி வருவது என்பது புத்திசாலித்தனம் அல்ல
https://www.heritagefamilypantry.com/TrL1kju0657